தமிழகம்

இலங்கை சிங்களர் குடும்பத்தினரை வரவழைத்து நேசக்கரம் நீட்டிய காரைக்குடி குடும்பத்தார்

இ.ஜெகநாதன்

காரைக்குடி: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் மன உளைச்சலில் இருந்த சிங்களர் குடும்பத்தினருக்கு காரைக்குடி குடும்பத்தினர் உறவுக்கரம் நீட்டி யுள்ளனர்.

காரைக்குடியைச் சேர்ந்த அம் சராஜ் மகாதேவன் என்பவர் இலங்கைக்குச் சென்றபோது, அங்கு சிங்களரான கல்லூரி மாணவி யுதாரி குடும்பத்துடன் அறிமுகம் ஏற்பட்டது.

தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு, மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையால் மாணவி யுதாரி குடும்பத்தினரும் மன உளைச்சலில் இருந்தனர். இதையடுத்து அவரையும், அவரது தந்தை சுமித், தாய் கங்கானி, பாட்டி பிரேமாவதி ஆகியோரை அம்சராஜ் மகாதேவன் தமிழகம் வரவழைத்தார். மேலும் அவர்களை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று மனஅமைதி கிடைக்க வழிவகை செய்தார்.

இதுகுறித்து யுதாரி கூறிய தாவது: இந்தியாவுக்கு தற்போது தான் முதல் முறையாக வந்துள்ளோம். தமிழகத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். கலாச்சாரம், பழக்க வழக்கம் மிகவும் அருமை. தமிழகம் வந்துள்ளது எங்களுக்கு மன நிறைவாக உள்ளது, என்றார்.

SCROLL FOR NEXT