அனைத்து விவசாயக் கடன்களை யும் தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்ப லூர் மாவட்டங்களில் விவசாயிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், நிர்வாகி புண்ணியமூர்த்தி தலைமையிலான விவசாயிகள், தஞ்சை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பெ.சந்திரசேகரனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதே போல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந் திரன் மற்றும் விவசாயிகள், திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், ஆட்சியர் மா.மதிவாணனிடம் மனு அளித்தனர்.
அனைத்து விவசாய சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவர் ஆர்.பி.பால சுப்பிரமணியன், மற்றும் நிர்வாகி கள், நாகை ஆட்சியர் எஸ்.பழனி சாமியிடம் மனு அளித்தனர். பின் னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆந்திர மாநிலத் தைப் போல, தமிழகத்திலும் அனைத்து கடன்களையும் தள்ளு படி செய்ய வேண்டும்” என்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் சு.கணேஷிடம், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு நிர்வாகிகள் மனு அளித்தனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் மனு அளித்தனர்.