தமிழகம்

சோளிங்கர் | விவசாயி வீட்டில் 16 பவுன் நகைகள் திருட்டு

செய்திப்பிரிவு

சோளிங்கர்: சோளிங்கர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன் (52). இவர், நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச தனது குடும்பத்தாருடன் சென்றார். இதையடுத்து, காலை 7.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப் பதை கண்டு சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து கொண்டப்பாளையம் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT