தமிழகம்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் ட்விட்டர் பதிவில் "யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்காகப் பணியாற்றவுள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்! சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள்! வெற்றி பெறாதவர்களுக்கு வெற்றிக்கனி எட்டும் தொலைவில்தான் உள்ளது!" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT