விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்வதாகவும், இதை தடுக்கக் கோரி, உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, அந்த தொகுதி பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 50-க்கும் மேற்பட்ட பெண்களுடன் நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலு வலகத்துக்கு சென்று, தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் முறையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பெண்கள் கையில் வைத்திருந்த ரூபாய் தாள்களை தேர்தல் நடத்தும் உதவி அலுவ லர் ராஜேந்திரன் மீது வீசியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு கண்ட னம் தெரிவித்தும், வழக்கறிஞர் பாலுவை கைது செய்ய வலி யுறுத்தியும் நேற்று உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவ லர்கள், அலுவலக ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட 100-க் கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண் டனர். இதனிடையே உளுந்தூர் பேட்டை வட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான ராஜேந்திரன், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பாமக வேட்பாளர் பாலு உட்பட 47 மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.