சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதியில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்நிலையில், கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மீது திமுக மேலிடம் நடவடிக்கை எடுக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது. இன்னும் 20 இடங்கள் இருந்திருந்தால் ஆட்சியை பிடித்து இருக்கலாம் என்ற அரிய வாய்ப்பை திமுக இழந்தது. இதற்கு சொந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும், மாவட்ட செயலாளர்களின் கவனக்குறைவே காரணம் என திமுக மேலிடம் கருதுகிறது. பல தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியை தழுவியுள்ளனர்.
தேர்தலுக்கு முன் மாவட்டச் செய லாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், 65 மாவட்டச் செயலாளர்களும், மாவட்டத்துக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும், எனக் கண்டிப்புடன் திமுக தலைமை கூறியது. இதன் மூலம் திமுக 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றலாம் எனக் கணக்கிட்டிருந்தது.
இந்நிலையில், தென் தமிழகத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கை கொடுத்த அளவுக்கு, மேற்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பை அள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதியில் சேலம் வடக்கு தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடியது. மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர் தவிர எட்டு இடங்களில் திமுக போட்டியிட்டது.
சேலம் கிழக்கு தொகுதி பொறுப்பாளரான வீரபாண்டி ராஜேந்திரன், அவரது சொந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர் ஆகிய இடங்களிலும் தோல்வியே மிஞ்சியது.
சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும், சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர் ஆகியவற்றிலும் தோல்வி தழுவியது. சேலம் மத்திய மாவட்டச் செயலாளரான வழக்கறிஞர் ராஜேந்திரன், சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரை தவிர்த்து, அவரது கட்டுப்பாட்டில் உள்ள சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் ஆகிய தொகுதி களிலும் தோல்வியை தழுவியது.
இத்தேர்தலில் சொற்ப இடங்களை இழந்ததால், ஆட்சி அமைக்க முடியாத சூழலுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்து திமுக மேலிடம் ஆய்வு செய்து வருகிறது. தோல்வி அடைந்த மாவட்டங்களில், திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் எவ்வாறு பணியாற்றினர், எதனால் தோல்வி ஏற்பட்டது, தேர்தல் பணியில் தொய்வு நிலை மற்றும் எந்தெந்த இடத்தில் செயலாளர்கள் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் நடந்து கொண்டனர் என பகுப் பாய்வு மேற்கொண்டுள் ளது. இதனால், தோல்வி அடைந்த மாவட்டச் செய லாளர்கள், பொறுப் பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சேலத்தில் வடக்கு தொகுதியில் ஒரு இடத்தை மட்டுமே கைப் பற்றி ஆறுதல் வெற்றி அளித்திருந்தாலும், உறுதி அளித்தபடி, மேலும், ஒரு தொகுதி யில் வெற்றி வாய்ப்பு பெறாததின் காரணத்தைக் கூற வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீர பாண்டி ராஜேந்திரன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் திமுக மேலிட நடவடிக்கை யால் தங்களது பதவிக்கு ஆபத்து வருமா என்ற கலக்கத்தில் உள்ளனர்.