பண அரசியலுக்கு முடிவு கட்டுங்கள் என மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வாக்காளர்களுக்கு வேண்டு கோள் விடுத்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து அவர் பேசியதாவது: இந்தியாவின் நவீன ஆலயங்கள் என நேருவால் வர்ணிக் கப்பட்ட பொதுத்துறை நிறுவனங் களை சூறையாட மோடி தலைமை யிலான அரசு முடிவோடு செயல் படுகிறது. ராணுவம் உட்பட அனைத் துத் துறையிலும் தனியாரை அனு மதிக்க முயற்சி மேற்கொண்டு வருகின் றனர். இது தடுக்கப்பட வேண்டும். அண்மையில் பெட்ரோல், டீசல் விலை களை உயர்த்தி தொழிலாளர்களுக்கு மே தின பரிசை வழங்கியுள்ளது மோடி அரசு.
தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இந்தியாவின் மதச்சார்பின்மையை காக்க முன்வருவதில்லை. மாறாக சந்தர்ப்பவாத கட்சிகளாக மாறியுள் ளன. நெருக்கடியான சூழலை பயன்படுத்தி மதவாத, ஜாதிய சக்தி களுடன் மறைமுகமாக கைகோத்து வருகின்றன. இந்த சந்தர்ப்பவாதம் முறியடிக்கப்பட வேண்டும்.
கடந்த ஐந்தாண்டு அதிமுக அரசில் தமிழகத்தில் ஊழலும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. ஏழைகள், விவசாயி கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை வளங்களை அழிப்பதில் திமுக, அதிமுக இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன. தமிழகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தேர்தலில் பண ஆதிக்கம் இருக்கிறது. பண அரசியலுக்கு மக்கள்தான் முடிவு கட்ட வேண்டும்.
இந்தியாவில் வேறெந்த மாநிலத் திலும் இல்லாத வகையில் முதல்வர் பதவியிலிருக்கும் ஒருவர் ஊழல் தண்டனைக்காக சிறை செல்வதும், மத்திய அமைச்சர் ஒருவர் ஊழல் தண்டனைக்காக சிறை செல்வதும் இங்குதான் காணமுடிகிறது. ஊழல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நடக்கிறது. தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத ஒரு மாற்று அரசு அமைவதற்கான சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.