நாங்குநேரி தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.திருப்பதி, திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் திடீரென்று அதிமுகவுக்கு திருப்பதி தாவியுள்ளது, திருநெல் வேலி மாவட்ட அரசியல் வட்டாரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. செய்தியாளர்களிடம் திருப்பதி கூறும்போது, “அதிமுக வின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது. பாமக தேர்தல் அறிக்கை நடைமுறைக்கு சாத்திய மில்லை. அதனால்தான் அதிமுக வில் இணைந்துள்ளேன்” என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி மீது சிவராமன் என்பவரின் மனைவி எஸ்.பொன்செல்வி, திருநெல் வேலி பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் மனு அளித்திருந்தார். அதில், திருப்பதி அடிக்கடி செல்பேசியில் தொடர்புகொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் அதிமுகவில் திருப்பதி இணைந்துள்ளார்.