தமிழகம்

சென்னை காவல் ஆணையராக டி.கே.ராஜேந்திரன் நியமனம்; நுண்ணறிவுப் பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி

செய்திப்பிரிவு

சென்னை பெருநகர காவல் ஆணையராக டி.கே.ராஜேந்திரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது அவர்களை மீண்டும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சிறைச்சாலை ஐஜியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் சென்னை பெருநகர காவல் ஆணை யராக இடமாற்றம் செய்யப்பட்டுள் ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக இருக் கும் எஸ்.ஜார்ஜுக்கு, சிறைத்துறை ஐஜி பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த அசுதோஷ் சுக்லா, அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி, தமிழக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி யாக இருந்த சி.சைலேந்திரபாபு, கடலோர காவல் குழும ஏடிஜிபி யாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

தமிழக நுண்ணறிவு பிரிவு ஐஜி.யாக இருந்த கரன் சின்ஹா சிபிசிஐடி ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே.என்.சத்தியமூர்த்தி, தமிழக நுண்ணறிவு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட எஸ்பி.யாக இருக்கும் பண்டி கங்காதருக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை உள் துறை முதன்மை செயலர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT