திமுகவும், அதிமுகவும் பொதுக்கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகின்றனர் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த 15 மாதங்களுக்கு முன்பே பாமக என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 8 மண்டல மாநாடுகள் பொதுக்கூட்டங்கள், உங்கள் ஊர் உங்கள் அன்புமணி போன்ற பல மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி உள்ளோம். எங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை சந்தித்து வருகிறோம். பாமக கடந்த ஆறு மாதம் காலமாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நட்சத்திர பேச்சாளர்கள் பாமகவிற்கு அவசியம் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்ளனர். அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். இனிமேல் இவர்கள் ஒன்றும் செய்யப்போவது கிடையாது. மக்கள் பாமக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். திமுக அதிமுக மீது மிகுந்த கோபத்தில் மக்கள் உள்ளனர்.
விவசாயத்தை திமுக, அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளும் நாசம் படுத்திவிட்டார்கள். பாமக தேர்தல் அறிக்கை அப்படியே திமுக , அதிமுக, ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கை திருடி இருகிறது. அதிமுக தற்போது அறிவிக்கப்கட்டவை வெற்று அறிவிப்புகள். பயத்தில் தான் இது போன்ற இலவசம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் குடிகார நாடாகவும், பிச்சைகார நாடாகவும் ஆகிவிட்டது. திராவிட கட்சிகள் மது ஒழிப்பு நாடகமாடுகின்றன. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் கடைசியாக இருகிறது. தமிழகத்தில் அனைத்து துறைகளும் கடனில் உள்ளது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் தான் கச்சத்தீவு தாரைவத்து கொடுத்தது. லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்தால் திமுக தான் தண்டனை கிடைக்கும்.
அதிமுக, திமுக பொது கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் பொது வாக்காளர்கள் அனைவரும் அதிமுக, திமுக, ஆட்சிக்கு வந்தால் ஒன்றும் செய்ய போவது இல்லை என்று நினைக்கிறார்கள். சில ஊடகங்கள் அவர்களுக்கு சாதமாக கருத்து கணிப்பு வெளியிடுகிறது. ஊடகங்கள் மக்கள் மத்தியில் தனிபட்ட கருத்து கணிப்பை திணிக்க வேண்டாம். ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும். மநகூ கூட்டணி என்பது தமிழகத்தில் ஒரு அறிகுறிகள் கூட இல்லை. அதிமுக ஐந்து ஆண்டுகளாக ஆட்சி இருந்த போது மது விலக்குகளுக்காக போராட்டம் செய்வார்கள் மீது தடியடி நடத்தியது. ஆனால் தற்போது ஆட்சியை பிடிப்பதற்காக படி படியாக மது விலக்கு கொண்டு வருவதாக சொல்கிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.