கோவை மாவட்டத்தின் மலைப் பிரதேசமாக விளங்கும் வால்பாறை எஸ்டேட்களில் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் மக்கள் வசிக்காத பகுதியாக வால்பாறை மாறிவிடும் என்று எச்சரிக்கின்றனர் சமூக நோக்கர்கள்.
இங்கு அப்படி என்னதான் பிரச்சினை? இப்பகுதி அரசியல் மற்றும் சமூக நோக்கர்கள் இது குறித்து கூறியதாவது:
தோட்டத் தொழிலாளர்களுக்கு சமதளப் பகுதியில் உள்ளதுபோல கணிசமான கூலி இல்லை. சமதளப் பகுதிகளில் தோட்ட வேலை, கட்டிட வேலை உள்ளிட்ட பணி செய்வோருக்கு ரூ.350 முதல் ரூ.500 வரை கூலி கிடைக்கும் நிலையில், தேயிலை தோட்டத் தொழிலாளியின் தினக் கூலி ரூ.240 மட்டுமே. கேரளாவில் தோட்டத் தொழிலாளிக்கு ரூ.310 கூலி வழங்கப்படுகிறது. அதையாவது இங்கு அமல்படுத்தக் கோரி தொடர்ந்து போராடினாலும், எஸ் டேட் நிர்வாகங்கள் செவி சாய்ப் பதாக இல்லை.
மொத்தமுள்ள 56 எஸ்டேட்களில், முன்பு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அது தற்போது 18 ஆயிர மாகக் குறைந்துவிட்டது. அதனால், எஸ்டேட் தொழிலாளர்களின் காலனிகளில் 15 வீடுகள் இருந்தால் அவற்றில் 8 வீடுகள் பூட்டிய நிலையிலேயே உள்ளன.
வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழில் மட்டுமே உள்ளது. அதை நம்பி எஸ்டேட் குடியிருப்பிலேயே வசிக்க வேண்டும். எஸ்டேட்கள் அரசின் நீண்டகால குத்தகை நிலங்களில் இருப்பதால் அதில் சொந்தமாக ஒரு சதுர அடி நிலம்கூட வாங்க முடியாது. வால்பாறை நகரில் உள்ள துண்டு நிலம் மட்டுமே மக்கள் வசிக்கக்கூடியது. அதிலும், கடைவீதியில் வியாபார தலங்களை நிறுவியிருக்கும் சிறு வணிகர்கள் காலங்காலமாக வசித்து வருகின்றனர். ஆக, தேயிலை பறிப்பு தவிர பெரிதாக மாற்றுத் தொழில் இல்லை.
குழந்தைகளை படிக்க வைப்ப தற்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் கல்லூரி படிப்பு முடித்து வந்தால் அதற்கேற்ற பணி வாய்ப்பும் இங்கு இல்லை. இதனால், பெற் றோர் அவர்களுடனே சமதளப் பகுதிக்கு சென்று கூலி வேலை யில் ஈடுபடுகின்றனர். குழந்தை கள் படிப்பு முடிந்தவுடன் அவர் களுக்கும் அங்கேயே ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ள முடிகிறது. அதனால் வால் பாறையை விட்டு வெளியே சென்ற வர்கள் திரும்பி வருவதில்லை.
இப்படி கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 35 ஆயிரம் குடும்பங்கள் தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருப்பூர், பல்லடம், பொள்ளாச்சி, கோவை என்று புலம் பெயர்ந்து சென்றுவிட்டன. இதை சரிக்கட்ட ஒடிசா, பிஹார் போன்ற மாநிலங்களிலிருந்து தொழிலாளர் களை அழைத்து வந்து, தங்க வைத்து வேலையில் அமர்த்தினர். அவர்களும் ஒருமுறை வந்துவிட்டு தம் சொந்த ஊருக்கு போனால் திரும்பி வருவதில்லை.
எனவே இதை சரிப்படுத்த இந்த மலைப் பகுதிக்கு ஏற்ப மாற் றுத் தொழில்களையும் இங்கு ஏற்படுத்த வேண்டும். படித்தவர் களுக்கு நம்பிக்கை தரும் விதமாக வும் அந்த தொழில்கள் அமைய வேண்டும்.
தேயிலை தோட்டத் தொழிலாளர் களுக்கு கேரளத்தில் அமல்படுத் தப்படும் கூலியை உடனடியாக இங்கும் அமல்படுத்த வேண்டும். ஆங்காங்கே மக்கள் வசிக்கும் அளவுக்கு, சொந்தமாக நிலம் வாங்கி வீடுகள் கட்டி குடியிருக்கும் அளவுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இல்லா விட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் வால்பாறையே காலியாகி விடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு கேரளத்தில் அமல்படுத்தப்படும் கூலியை உடனடியாக இங்கும் அமல்படுத்த வேண்டும். ஆங்காங்கே மக்கள் வசிக்கும் அளவுக்கு, சொந்தமாக நிலம் வாங்கி வீடுகள் கட்டி குடியிருக்கும் அளவுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் வால்பாறையே காலியாகிவிடும்.