புதுச்சேரி பாஜக மாநில நிர்வாகிகள் பயிற்சி முகாமில் பேசும் மாநில பொறுப் பாளர் நிர்மல் குமார் சுரானா. உடன் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் உள்ளிட்டோர். 
தமிழகம்

பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்: புதுச்சேரி பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: பிரதமர் மோடியின் லட்சியங்களை யும், திட்டங்களையும் உணர்வுப்பூர் வமாக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

புதுச்சேரி பாஜக மாநில நிர்வாகி கள் பங்கேற்கும் மூன்று நாள் பயிற்சி முகாம் விவேகானந்தா பள்ளியில் நேற்று தொடங்கியது. மாநிலத் தலைவர் சாமிநாதன் வர வேற்றார்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு பொறுப்பாளர் மற்றும் பயிற்சி முகாம் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்பி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேசுகையில், “பயிற்சிவகுப்பானது அனைத்து நிர்வாகிக ளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி அளிக்க உள்ளவர்கள் அனைவரும் கட்சியை பலப் படுத்துவது பற்றி தெரிவிப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசுகை யில், “பிரதமர் மோடி கடந்த 2014 முதல் 2022 வரை 8 ஆண்டுகளில் அனைவருக்கும் வங்கியில் கணக்கு, பிளம்பர், எலக்ட்ரிஷியன், கொத்தனார் போன்றோர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு, மேக் இன் இந்தியா திட்டம், தூய்மை இந்தியா திட்டம், 2015-ல் பெண் குழந்தைகள் பாது காப்பு செல்வமகள் சேமிப்பு திட் டம், முத்ரா வங்கி கடன் திட்டம், இந்தியா ஒளிர்கிறது மிளிர்கிறது திட்டத்தில் 18,500 மின்சார வசதி இல்லா கிராமங்களுக்கு மின்வசதி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், 2016-ல்ஏழைகளுக்கு இலவச எரிவாயு அடுப்பு திட்டம், விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடி மானியதிட்டத்தில் ரூ.6 ஆயிரம் வருடத் திற்கு இரண்டு தவணையில் செலுத்தும் திட்டம், இப்படியாக 2022-ல் தற்போது கஜசக்தி திட்டம் (விரைவு சரக்கு போக்குவரத்து திட்டம்) போன்ற அனைத்து திட்டங்கள் மிகச் சிறப்பாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. பிரதமர் மோடியின் லட்சியங்களையும், திட்டங் களையும் உணர்வுப்பூர்வமாக மக்க ளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பயிற்சி முகாமின் முதல் நாளில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மற்றும் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

SCROLL FOR NEXT