தமிழகம்

தேமுதிக வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு: அதிமுகவினர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி தேமுதிக வேட்பாளர் ஜமுனா. இவர், தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அதிமுக வேட்பாளர் ஆர்.சந்திரசேகரனும் அங்கு பிரச்சாரத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த, தோகைமலை ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் தியாகராஜன் உள்ளிட் டோர், தேமுதிக வேட்பாளர் ஜமுனாவின் காரை முற்றுகையிட்டு, காரின் கண் ணாடியை உடைத்தார்களாம்.

இதுதொடர்பாக தோகைமலை காவல் நிலையத்தில் தேமுதிகவினர் அளித்த புகாரை ஏற்க மறுத்ததால், அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் புகாரைப் பெற்று தியாகராஜன் உள்ளிட்ட அதிமுகவினர் 20 பேர் மீது போலீ ஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT