மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி 
தமிழகம்

காஞ்சிபுரம்: பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிந்து உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன.

கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.

இதில் ஆரியப்பெரும்பாக்கம் கிராம உதவியாளராக பணியாற்றிய சின்னபையன் என்பவரின் மகன் சி.பிரகாஷ் என்பவருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடமும், தாமல் கிராமத்தில் உதவியாளராக பணியாற்றிய பட்டாபி என்பவரின் மகன் ப.கவியரசனுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடமும், கீழ்புத்தூர் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றிய சந்திரன் என்பவரின் மகன் அரி என்பவருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியிடமும், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய நரசிம்மன் என்பவரின் மனைவி தேன்மொழி என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணியிடமும், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய சரவணன் என்பவரின் மனைவி எஸ்.சுஜாதா என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணியிடமும் என மொத்தம் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT