செங்கை/காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 26-ம் தேதியும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெறும்.
கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதில் அளிக்கவும், குறைகளைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளனர்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர்கள் ஆ.ர.ராகுல் நாத், மா.ஆர்த்தி தெரிவித்தனர்.