திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெய லலிதா உட்பட யாரையும் பழி வாங்கமாட்டோம் என திமுக தலைவர் கருணாநிதி உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த கருணாநிதி பேசியதாவது:
எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் சிந்தாதிரிப்பேட்டை யில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்வது வழக்கம். அந்த வழக்கம் மாறாமல் மக்களைச் சந்திக்க சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்துள்ளேன்.
நாளை மறுநாள் (மே 16) நடைபெறவுள்ள சட்டப்பேர வைத் தேர்தலில் ஆட்சி மாற் றம் ஏற்படும். திமுக அமைச் சரவை பதவியேற்பது உறுதி யாகிவிட்டது. நல்லாட்சி மலர, ஜனநாயகம் செழிக்க தமிழக மக்கள் திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
சிந்தாதிரிப்பேட்டை எனக்கு ராசியான இடம் என்று அனை வரும் சொல்கிறார்கள். அது உண்மைதான். அந்த ராசி மேலும் அதிகமாகி திமுக வெற்றி பெறும் என்பதை உறுதிப் படுத்துவதற்காக இங்கு வந்துள்ளேன்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடு வார்கள் என திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தாலும், வராவிட்டாலும் யாரையும் பழி வாங்க மாட்டோம். பழிவாங்கும் எண்ணத்தை அண்ணா எனக்கு கற்பிக்கவில்லை. கடந்த 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பழிவாங்கும் எண்ணத்துடன் என்னை கைது செய்ய உத்தர விட்டார். அதன்படி நள்ளிரவில் கைது செய்து காவல்துறையினர் கொடுமை செய்தனர். அதுபோல திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா உட்பட யாரையும் பழிவாங்க மாட்டோம் என்பதை அழுத்தம் திருத்தமாக உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த திமுக ஆட்சியில் செயல் படுத்தப்பட்ட பல திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முடக்கியது.அப்படி முடக்கப்பட்ட திட்டங்களை எல்லாம் மீண் டும் செயல்படுத்துவோம். முடக் கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உலகமே வியக் கும் அளவுக்கு சிறந்த நூலக மாக மாற்றுவோம். இப்படி மக்க ளுக்கான திட்டங்களை நிறை வேற்றிதான் பழிவாங்குவோம். எனவே, திமுக ஆட்சிக்கு வந் தால் தன்னை கருணாநிதி பழி வாங்கி விடுவாரோ என ஜெய லலிதா உட்பட யாரும் அஞ்ச வேண்டாம்.
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுபவர்கள் உட்பட அதி காரத்தில் உள்ள அனை வரையும் கைக்குள் போட்டுக் கொண்டு தங்கள் காரியத்தை ஆளுங்கட்சியினர் ஈடேற்றிக் கொள்கின்றனர். மக்கள் நலனில் அக்கறையில்லாத அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்ட வேண்டும். திமுக என்பது வெறும் அரசியல் கட்சி யல்ல. சமுதாய இயக்கம். பெரி யார், அண்ணாவின் லட்சியங் களை நிறைவேற்ற, பகுத்தறிவு கொள்கைகளை நிலைநாட்ட நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அனைத்து மத, ஜாதி மக்களிடமும் இணக்கத்தை ஏற்படுத்தி மனித நேயத்தை வளர்க்கும் இயக்கம் திமுக. எனவே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
முன்னாள் மத்திய அமைச் சர்கள் தயாநிதி மாறன், ஜெகத் ரட்சகன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாலை 5.24 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய கருணாநிதி 5.54 மணிக்கு பிரச்சாரத்தை நிறைவு செய்தார். கருணாநிதி மேடைக்கு வருவதற்கு முன்பாக திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். கருணாநிதி தனது பேச்சில் புறநாநூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார்.