தமிழகம்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: "பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும்" என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் இனிய தோழரும், கேரள முதல்வருமான பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர், அனைவர் நலனையும் அவாவுபவர், கேரள முதல்வர், வயதுக்கு மரியாதையைக் கூட்டுபவர், என் இனிய நண்பர் பினராயி விஜயனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT