தமிழகம்

உலக வர்த்தக ஒப்பந்தம் குறித்து மவுனம்: அரசியல் கட்சிகள் மீது வெள்ளையன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

உலக வர்த்தக ஒப்பந்தம் மீதான நிலைப்பாடு குறித்து மாநில அரசியல் கட்சிகள் மவுனம் சாதித்து வருவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக, த.வெள்ளை யன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

33-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு, உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு சில்லறை வணிக பாதுகாப்பு மாநாடு வரும் மே 5-ம் தேதி மேல்மருவத்தூர் அருகில் உள்ள அச்சிறுப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

உலக வர்த்தக ஒப்பந்தம் மூல மாக அனைத்து துறைகளிலும் அந்நிய ஆதிக்கம் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக விவசாயம், சில்லறை வணிகம், நெசவுத் தொழிலில் அந்நிய ஆதிக் கம் மேலோங்கிவிட்டது. சில் லறை வணிகத்தை ஒட்டுமொத்த மாக வெளிநாட்டினர் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய ஆட்சியாளர்கள் அனுமதித் துள்ளனர்.

இதனால், லட்சக்கணக்கா னோருக்கு வேலைவாய்ப்பு அளிக் கும் சில்லறை வணிகம் அழி வின் விழிம்பில் இருக்கிறது. இருப்பினும், மாநில கட்சிகள் இது குறித்து கண்டனம் தெரிவிக்க வில்லை, கவலைப்படவும் இல்லை என்றார்.

SCROLL FOR NEXT