தி.மலை ஆட்சியர் அலுவலக முகப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட குணசேகரன் மீது, காவல்துறையினர் தண்ணீரை ஊற்றினர். 
தமிழகம்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் காவல் துறை மெத்தனத்தால் தொடரும் தற்கொலை மிரட்டல்: தடையின்றி கொண்டு வரப்படும் மண்ணெண்ணெய் பாட்டில்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாது காப்பு பணியில் காவல்துறையினர் மெத்தனமாக இருந்ததால், மண் ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நிகழ்வு நேற்றும் அரங்கேறியது.

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அப்போது அவர், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அவரிடம் இருந்த மண்ணெண் ணெய் நிரப்பப்பட்ட பாட்டிலை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது, தண்ணீரை ஊற்றினர்.

அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவரது பெயர் குணசேகரன், ஆனாய் பிறந்தான் கிராமத்தில் வசிப்பவர் என தெரியவந்தது. மேலும், முன் விரோதம் காரணமாக, அதே கிராமத்தில் வசிக்கும் 4 பேர், தன்னையும், தனது மகன்களை தாக்கி வருவதாகவும், இதனால் குடும்பத்தில் உள்ள வர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து மிரட்டப் பட்டு வருவதாகவும், தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுக்கும் நிகழ்வு வாடிக்கையாகிவிட்டது. பாதுகாப்பை பலப்படுத்தாமல் காவல் துறையும் மெத்தனமாக செயல்படுவதால், ஆட்சியர் அலுவலகம் உட் பகுதிக்குள் மண்ணெண்ணெய் பாட்டில்கள் சர்வ சாதாரணமாக கொண்டு வரப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆட்சியர் பா.முருகேஷ் தக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். காவல் நிலையங்களில் புகார் அளித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆட்சியர் அலு வலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.80 லட்சம் மின் கட்டணம் பாக்கி

வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலா மூர்த்தி, ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “வேங்கிக்கால் ஊராட்சி யில் சேமிப்பு நிதியாக ரூ.55 லட்சம் உள்ளது. வேங்கிக்கால் ஊராட்சியில், மின்சார வாரியத் துக்கு ரூ.80 லட்சம் மின் கட்டண நிலுவை தொகை உள்ளது. எனவே, ஊராட்சி நிதி ரூ.55 லட்சத்தை, மின் கட்டணத்துக்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினேன். இதனால், எனக்கு மிரட்டல் விடுக் கப்படுகிறது.

கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெறவில்லை. ஆனால், பணிகள் நடைபெற்றுள்ளதாக கணக்குகள் எழுதப்பட்டு, வவுச் சரில் கையொப்பமிட சொல்லி, என்னை மிரட்டுகின்றனர். எனவே, வேங்கிக்கால் ஊராட்சியின் ஆவணங்களை, ஆட்சியரின் நேரடி மேற்பார்வையில் ஆய்வு செய்யு மாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பொது பாதை ஆக்கிரமிப்பு

திருவண்ணாமலை அடுத்த கொளக்கரவாடி கிராமத்தில் வசிக்கும் ராஜீவ்காந்தி தலைமை யிலான குழுவினர் அளித்துள்ள மனுவில், “கொளக்கரவாடி கிராமத்தில் இருந்து யாதவபுரம் கிராமத்துக்கு செல்ல சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை சிலர், ஆக்கிர மித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என கேட்டுகொண்டனர்.

SCROLL FOR NEXT