தமிழகம்

39 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வெற்றி

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியில் எண்ணப்பட்டன. திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் வாக்கு எண்ணிக்கையை பார்வை யிட்டார். இந்த தொகுதியில் 45 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் வேட்பாளர்களின் முகவர்கள் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.

முதல் சுற்றில் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை விட 1806 வாக்குகள்தான் ஜெயலலிதா முன்னி லையில் இருந்தார். இதனால் அதிமுக முகவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்ற பின்னரே நிம்மதி யடைந்தனர். வாக்கு எண்ணும் அறையிலேயே ஜெயலிலதாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.

பின்னர், 19-வது சுற்றில் 97 ஆயிரத்து 218 வாக்குகள் பெற்ற ஜெயலலிதா 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழன் 57 ஆயிரத்து 673 வாக்குகளே பெற்றார்.

கடந்த இடைத்தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT