தமிழகம்

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணம் விநியோகம்: இளங்கோவன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணம் கொடுத்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலை ஈரோட்டில் வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பணப்புழக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் 2 தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்திருக்கிறார்கள்.

அதிமுக பொறுத்தவரையில் எல்லா தொகுதிகளிலும் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இதை தேர்தல் கமிஷன் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. பணம் கொடுத்தது நிரூபணமால், வெற்றி பெற்றாலும் அவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT