தமிழகம்

டோக்கன் கொடுப்போருக்கு பொருட்கள்: வணிகர்கள் மீது குற்ற நடவடிக்கை

செய்திப்பிரிவு

தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிப்பது தொடர்பான விளக்க கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் கைபேசி சேவை வழங்கும் நிறுவ னங்களின் பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில், மாவட்ட தேர் தல் அலுவலர் சந்தரமோகன் நிருபர் களிடம் கூறியதாவது: கட்சியினர் பல்க் எஸ்எம்எஸ், வாய்ஸ் மெயில் அனுப்புவதாக இருந்தால், மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ, மாநில தேர்தல் அலுவலகத்திலோ முன் அனுமதி பெற வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதிகளில் கூறப் பட்டுள்ளது. முன் அனுமதிக் கடி தத்தை சமர்ப்பித்தால் மட்டுமே கைபேசி சேவை வழங்கும் நிறுவ னங்கள், பல்க் எஸ்எம்எஸ், வாய்ஸ் மெயில்களை அனுப்ப வேண்டும். அப்போதுதான், இதற்கான செலவை வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க முடியும். ஆட்சேபத்துக்குரிய அம்சங்களை யும் நீக்க முடியும். இதை கைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீறினால் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், மேல் நடவடிக்கை எடுக்க டிராய்க்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியினர் வழங்கும் கூப்பன்களை வாக்காளர்கள் கொடுத்தால், அவர்களுக்கு பொருட்களை வழங்கும் செயலில் வணிகர்கள் ஈடுபடக்கூடாது. மீறி னால், அவர்கள் மீது குற்ற நடவ டிக்கை எடுக்கப்படும் என்று வணிகர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை ரூ.8 கோடியே 49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ரூ.2 கோடியே 19 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதத் தொகை தொடர்பாக பல்வேறு விசா ரணைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT