தமிழகம்

திருவாரூர் அருகே கோயில் தேர் கவிழ்ந்து 2 பேர் பலி

செய்திப்பிரிவு

திருவாரூர் அருகே உள்ள திருக்கர வாசல் தியாகராஜ சுவாமி கோயில் தேர் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருக்கரவாசல் ஆதிவிடங்க தியாகராஜ சுவாமி கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க தாகும். சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டு தோறும் மே மாதம் வைகாசி விசாகத் திருவிழாவும், தேரோட்டமும் நடை பெறும். அதன்படி, கடந்த 12-ம் தேதி திருவிழா தொடங்கியது.

தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேர் போல வடி வமைக்கப்பட்ட இந்த தேர், 12 அடி அகலம், 12 அடி நீளம் கொண்டது. தேரோட்டத்தையொட்டி தேர் அலங் கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 10 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.

கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழவீதி தேரடியிலி ருந்து சிறிது தூரம் சென்றதும், தேர்ச் சக்கரங்கள் தார் சாலையிலிருந்து விலகி, மண் தரையில் இறங்கின.

மழையால் ஈரமாக இருந்த மண்ணில் தேர் சக்கரங்கள் சிக்கா மல் இருப்பதற்காக, தேரின் வடத்தை டிராக்டரில் கட்டி இழுத் துள்ளனர். அப்போது, தேர்ச் சக் கரங்கள் மண்ணிலிருந்து வெளியே வராமல், முன்பக்கமாகச் சாய்ந்து கவிழ்ந்தது.

இதில், தேர்ச் சக்கரங்களுக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த, தியாகராஜர் கோயில் ஆழித்தேருக்கு முட்டுக்கட்டை போடும் கல்யாணசுந்தரம்(58), திருவாரூர் மருதப்பாடி முருகை யன்(49) ஆகியோர் தேரின் அடியில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிரேன் உதவியுடன் சேற்றில் சிக்கிய தேரை நகர்த்தி, தேரின் அடியில் சிக்கி யிருந்தவர்களை மீட்க முயன்றனர். எனினும், முருகையன் அந்த இடத் திலேயே உயிரிழந்தார். காய மடைந்த கல்யாணசுந்தரம், திரு வாரூர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் த.ஜெயச்சந்திரன், கோட் டாட்சியர் ரா.முத்துமீனாட்சி ஆகி யோர் அங்கு சென்று, விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT