சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) டெக்னீஷியன் பணியில் 88 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இக்காலியிடங்கள் எலெக்ட் ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், பிட்டர் ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.
பணி நியமனம்
இப்பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்று ஐடிஐ, என்சிவிடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். தகுதி யுள்ள நபர்கள் ஜூன் 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.isro.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.