திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னையில் 24-ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைமை செயற்குழு கூட்டம், வரும் 24-ம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் மு.கருணாநிதி தலைமை வகிக்கிறார். அதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.