தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தி (45). இவர், தி.மலை நகர காவல் நிலைய எல்லையில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வசந்தி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப் பட்டு வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.