அதிமுக மற்றும் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டினார்.
பாஜக வேட்பாளர்கள் கோபி நாத் (சேலம் வடக்கு), அண்ணா துரை (தெற்கு) ஆகியோரை ஆதரித்து சேலத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் எங்கும் எதிலும் கமிஷன், ஊழல் என அமைச்சர்கள் மட்டுமல்லாது, கட்சி நிர்வாகிகளும் கோடிக்கணக்கில் பணத்தை குவித்து வைத்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் வாகனச் சோதனை என்ற பெயரில் வணிகர்களிடம்தான் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக-வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு அதிமுக-வினர் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டிக் கொண்டே மறுபுறம் திமுக-வினரும் பணம் கொடுத்து வருகின்றனர். பணம் கொடுக்கும் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது.
எதிர்க்கட்சி தலைவராக விஜய காந்த் பதவியில் இருந்த போது மக்களுக்காக என்ன செய்தார்.
தமிழகத்தில் தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைவதே நல்லது. மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களிப்பது, வாக்காளர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். இவ்வாறு அவர் கூறினார்.