தமிழகம்

கூடலூர் | மின்சாரம் பாய்ந்து பெண் யானை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கூடலூர்: கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் யானை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் பாடந்துரை பீட்டில் உள்ள வுட்பிரையர் எஸ்டேட்டில், நேற்று காலை 9 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்துகிடப்பதாக கூடலூர் வனச்சரகருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் சென்று ஆய்வு செய்தார்.

மின்கம்பியை யானை இழுத்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்று மின்வாரிய அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் வன அலுவலர் விசாரித்து வருகிறார். முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், யானையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தார்.

SCROLL FOR NEXT