தமிழகம்

தமிழகத்தில் 90 தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மு.இசக்கியப்பன்

தமிழகத்தில் 90 தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 30 வேட் பாளர்களுக்கு மேல் போட்டியிடும் ஆர்.கே.நகர் உட்பட 3 தொகுதி களில் 3 இயந்திரங்கள் தேவைப் படும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் 234 தொகுதியிலும் மொத் தம் 3,785 வேட்பாளர்கள் போட்டியி டுகின்றனர். இதில் அதிக வேட் பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்ற பெருமையை பெற்றிருக் கிறது முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர். இங்கு 45 பேர் களத்தில் உள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 36 பேரும், 3-வதாக பெரம்பூரில் 33 பேரும் போட்டியிடுகின்றனர்.

இதுபோல், மிகக் குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளாக மயிலாடுதுறை, கூடலூர், ஆற்காடு ஆகியவை உள் ளன. இவற்றில் தலா 8 வேட்பா ளர்கள் மட்டுமே போட்டியிடு கின்றனர். பேராவூரணி, திருவை யாறு, கீழ்வேலூர், வால்பாறை, உடுமலைப்பேட்டை, வானூர் ஆகிய 6 தொகுதிகளும் தலா 9 வேட்பாளர்களை களத்தில் கொண்டுள்ளன. வாசுதேவ நல்லூர், காட்டுமன்னார்கோவில், பூம்புகார், பட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் தலா 10 வேட்பாளர்கள் மோதுகின்றனர்.

வாக்கு இயந்திரம்

தேர்தலில் 15 பேர் வரை போட்டியிடும் தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 16 முதல் 30 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அதன்படி, தமிழகத் தில் 90 தொகுதிகளில் 2 இயந்திரங் கள் பயன்படுத்தப்படும். 30 வேட்பாளர் களுக்கு மேல் போட்டியிடும் ஆர்.கே.நகர், அரவக்குறிச்சி மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

SCROLL FOR NEXT