தமிழகம்

ஒகேனக்கலில் நீர்வரத்து 45,000 கனஅடியாக உயர்வு: காவிரி ஆற்றில் குளிக்க தடை நீட்டிப்பு

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று (வெள்ளிக்கிழமை) விநாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 17ஆம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில், ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக 18ஆம் தேதி காலை அளவீட்டின் படி நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அன்று பகலில் 28 ஆயிரம் கன அடி வரை உயர்ந்த நீர்வரத்து அன்று மாலை 24 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. 19-ம் தேதி இந்த நீர்வரத்தில் சரிவு ஏற்பட்டு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக பதிவானது.

இந்நிலையில், இன்று 20-ம் தேதி காலை அளவீட்டின் போது நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

20 ஆயிரம் கன அடியை எட்டியபோது ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்தது. இந்த தடை தற்போது வரை தொடர்ந்து அமலில் உள்ளது.

SCROLL FOR NEXT