மழையின் காரணமாக வாக்குப்பதிவு செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டை பகுதியில் டி.ஆர்.பாலு வாக்களித்தார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, ''தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்'' என்று கூறினார்.