தமிழகம்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT