நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜூன் 11-ம் தேதி இரவு பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.
என்எல்சியில் பணிபுரிந்து வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப் பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், பஞ்சப்படி, நிலம் கொடுத் தோருக்கு வேலைவாய்ப்பு உள் ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பல வருடங் களாக போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களை முன் னின்று நடத்திவரும் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸை நிர்வாகத்துக்கு அனுப்பியிருந்தனர்.
பின்னர், மே 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில், தொழிலாளர் துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மந்தாரக்குப்பத்தில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க பேரவைக் கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் கல்யாணசுந்தரம், அமைப்புச் செயலாளர் திருஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராமமூர்த்தி, பிரச்சார செயலாளர் முனியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சங்கத்தின் சிறப்புத் தலைவர் சேகர் பேசியதாவது:
வரும் 9-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதன் மூலம் தமிழக செயலாளர் வாயிலாக தமிழக முதல்வரை போராட்டக் குழுவினர் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்கான வாய்ப்பை பெற வேண்டும். அதன் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதபட்சத்தில், ஜூன் 11-ம் தேதி இரவு பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
ஒவ்வொரு முறையும் ஒப் பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்போது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு சமரச முயற்சி யில் ஈடுபடுகிறது.
அதனால் இந்த முறை முன்னதாகவே தமிழக அரசிடம் முறையிட உள்ளோம். அவர்கள் மத்திய அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினையைக் கொண்டு சென்று சுமுக மற்றும் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் ஏற்படும் மின் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.