தமிழகம்

மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வ.உ.சி. பேத்தி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து, திண்டுக்கல் கடை வீதியில் வ.உ.சிதம்பரனாரின் பேத்தி மரகதமீனாட்சி பேசியதாவது: தாயைவிட தாய்நாடு முக்கியம். வாக்களிக்கும் முன் ஒவ்வொரு வரும் யோசிக்க வேண்டும். ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு வீட்டை கொள்ளை யடித்துக் கொள்கிறேன் என்றால் அனுமதிப்போமா. அதுபோலத்தான் வாக்குக்கு பணம் வாங்குவது என்பது.

நாட்டை பாதுகாத்தால்தான் வீடு பாதுகாப்பாக இருக்கும். நாட்டின் சுதந்திரத்துக்காக அன்று செக்கிழுத்தனர். வெள்ளையர் களிடம் சித்ரவதைப்பட்டு, ரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்றுத் தந்த னர். அந்த சுதந்திரத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண் டும். ஏரி, குளம் எல்லாம் நம் முன் னோர் பாதுகாத்துக் கொடுத்த சொத்து. அவற்றை ஆக்கிரமித்து விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் செய்துவிட்டனர். இதை அனுமதிக்கலாமா. நாம் நாட்டை பாதுகாக்கவில்லை என்றால், நம் சந்ததிகள் நம்மை மன்னிக்கமாட்டார்கள்.

சந்தர்ப்பம் ஒருமுறைதான் கதவைத் தட்டும். நல்ல தலை வர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களை நாம் ஆட்சியில் அமர வைக்க வேண்டும். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவர் இல்லை. அன்று வெள்ளையர் களுக்கு எதிராக நாடு கிளர்ந் தெழுந்தது. இன்று கொள்ளையர் களுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். இந்த முறை, நீங்கள் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வில்லை என்றால் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT