தமிழகம்

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் பட்டியலை வெளியிடுவோம்: முத்தரசன் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மதுரையில் நேற்று நிருபர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலர் முத்த ரசன் கூறியதாவது: அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் நிர்பந் தத்தின் காரணமாக அதிமுக தேர்தல் அறிக்கையை வெளி யிட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிட்ட அதே நாளில் மதுரவாயலில் மதுக்கடையை அகற்றக் கோரிய மக்களை போலீஸார் தாக்கினர். திருச்சி யில் பூரண மதுவிலக்கு கோரி மாநாடு நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

திமுக, அதிமுக தவிர 3-வது அணி ஆட்சி அமைக்கக் கூடாது என்பதில் பெரு நிறுவனங்கள் உறுதியாக உள்ளன. எனவே திமுக அணி ஆட்சி அமைக் கும் என்றும், அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு வெளியிடுகின்றன. இது கருத்துக்கணிப்பு அல்ல. கருத்துத் திணிப்பு. பிஹாரில் நிதிஷ்குமார் ஆட்சி அமைப்பார் என கருத்துக்கணிப்பு கூற வில்லை. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பார் என கருத்துக்கணிப்பு கூற வில்லை. ஆனால் அங்கே அவர்கள் ஆட்சி அமைத்தனர். ஒருபுறம் பண விநியோகமும், மறுபுறம் வன்முறையும் நடை பெற்று வருகிறது. கரூரில் அன்புநாதன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்று உளவுத் துறை கூறுவது வியப்பாக உள்ளது.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள் குறித்த பட்டியல் தயாராக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில், உரிய நேரத் தில் அந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிடத் தயாராக உள்ளோம். ஜெயலலிதாவுக்கு பாஜக அரசு உடந்தையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT