தமிழகம்

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மே 20, 21-ம் தேதிகளில் சர்வதேச யோகா மாநாடு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் யோகா துறை சார்பில், சர்வதேச யோகோ மாநாடு வரும் 20, 21-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முழு உடல் ஆரோக்கியத்தால் மட்டுமே வாழ்க்கை முழுமையடைகிறது என்ற கருத்தின் அடிப்படையில், தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் யோகா துறை, பரஞ்சோதி யோகா கல்லூரி, வேதாத்ரி மகரிஷி யோகா கல்லூரி ஆகியவை இணைந்து, மேலக்கோட்டையூரில் உள்ள விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 20, 21-ம் தேதிகளில் சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளன.

‘முழு ஆரோக்கியத்துக்காக பழங்கால மற்றும் நவீன யோகா’ என்ற கருத்துடன் நடத்தப்படும் இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்கு யோகா துறைத் தலைவர் (பொறுப்பு) வி.துரைசாமியை 9842708648 என்ற செல்போன், icamyhh2022@gmail.com என்ற இ-மெயில் அல்லது 044-27477906/175 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT