சிவகங்கை: `இந்து தமிழ் திசை' செய்தி எதி ரொலியால் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சாலையில் பேவர் பிளாக் பதிக்கப்பட்டது.
கல்லல் அருகே பனங்குடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக் கிராமத்தில் நடுவளவு தெரு பல ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலையாக மாற்றப்பட்ட நிலை யில், பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்தது.
இதையடுத்து இச்சாலையை சீரமைத்துத்தர தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து கிராம மக்கள் கல்லல் அதிகாரிகளிடம் மனு கொடுத்தபோது சாலையில் ஏற் கெனவே பேவர்பிளாக் கற்கள் பதித்துவிட்டதாக தெரிவித்துள்ள னர். இதனால் அதிர்ச்சி அடைந்த பனங்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சாலை குறித்த விவரம் கேட்டார்.
அதில் நடுவளவு தெரு வில் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்த செய்தி கடந்த ஆண்டு நவ.2-ம் தேதி `இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியானது. இதுகுறித்து விசாரிக்க ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமனுக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத் தரவிட்டார். விசாரணை நடத்திய சிவராமன், நடுவளவு தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுத்தார். தற்போது அந்த தெருவில் 220 மீ. தூரத்துக்கு ரூ.9 லட்சத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன.