தமிழகம்

வாக்குக்கு பணம் வாங்காதீர்: சீமான் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களான பெரம்பலூர் அருண்குமார், குன்னம் அருள், அரியலூர் தங்கமாணிக்கம் ஆகியோரை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று வாக்குறுதி வழங்கியே 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக என 2 கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றன. ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்பவர்கள், ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை?

லஞ்சம், ஊழல் என ஊறித்திளைத்த இந்த கட்சிகளிடம் வாக்களிக்க பணம் வாங்கினால் தமிழக மக்களின் ஏமாற்றங்கள் தொடரவே செய்யும். எனவே, வாக்குக்கு பணம் வாங்காதீர்கள் என்றார்.

SCROLL FOR NEXT