புதுச்சேரி: தரமற்ற சாலைகள், வர்ணமில்லா வேகத்தடை, சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்கள், ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 1,044 பேர் உயிரிழந்துள் ளனர். 7,164 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். சாலை விபத்துகளை புதுச்சேரி அரசு கட்டுப்படுத் துமா என்ற கேள்வி தற்போது அதிகளவில் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஆறுஆண்டுகளில் நடந்த விபத்துகள்தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்து பெற்றுள்ள ராஜீவ்காந்தி மனித உரி மைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது:
கடந்த 2016 முதல் 2021 வரை தெற்கு மற்றும் மேற்கு போக்குவரத்து காவல் பகுதிகளில் 612 பேர் உயிரிழந்ததுடன், 4,050 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுபோல் கிழக்கு, வடக்கு போக்கு வரத்து காவல் பகுதிகளில் 3,114 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 432 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளில் 7,164 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 1,044 பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய பரப்பு கொண்ட புதுச்சேரியில் இது மிக அதிகம்.
முக்கியமாக, புதுச்சேரியில் பேருந்துகளுக்கு வேகக் கட்டுப் பாட்டு கருவி பொருத்தவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் நடுவே தடுப்புக்கட்டைகள், ஒளிப் பான்கள் அமைக்கவில்லை. சிக்னல்களை மறைத்தும், கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் அமைக்கப்படும் பேனர், கட்அவுட்கள், மோசமான சாலை கள், வர்ணமில்லா மற்றும் பழுதான வேகத்தடைகள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்கள் போன்றஏராளமான குறைகள் அதிகரித் துள்ளன. அதை களைய நடவடிக்கை எடுக்க ஆளுநர், உள் துறை அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மனுஅளித்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.