ஆளுங்கட்சியினர் எவ்வளவு பணத்தை வாரியிறைத்தாலும் பணநாயகத்தை ஜனநாயகம் வெல்லும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
சென்னை அடையாறு காமராஜர் அவென்யூவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை 8.45 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, ''மூட நம்பிக்கை கொண்டவர்களால் ராகு காலம் என கருதப்படும் காலை 8.45 மணிக்கு நான் வாக்களித்தேன். எனது துணைவியார், மகன், மருமகள், பேரப்பிள்ளைகளும் வாக்களித்தனர்.
ஆளுங்கட்சியினர் எவ்வளவு பணத்தை வாரியிறைத்தாலும் பணநாயகத்தை ஜனநாயகம் நெல்லும். திமுக அமோக வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் காலதாமதமாக விழித்துக் கொண்டு 2 தொகுதிகளில் தேர்தலை தள்ளிவைத்துள்ளது'' என்றார்.