மதுரை: பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாற்றுத்திறனாளி மாணவியை மேயர் இந்திராணி பாராட்டினார்.
மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஜெ.ஜெர்லின் அனிகா. வில்லாபுரத்தைச் சேர்ந்த இவர் செவித்திறன் குறைந்த மாற்றுத் திறனாளி.
இவர் பிரேசிலில் நடந்த 24-வது பாரா ஒலிம்பிக் இறகுப் பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றார். மேலும் இந்திய அணி பேட்மிண்டன் குழு போட்டியிலும் தங்கம் வென்றார். மாணவி ஜெ.ஜெர்லின் அனிகாவை மாநகராட்சி மேயர் இந்திராணி நேரில் அழைத்துப் பாராட்டினார்.
மாணவி ஜெ.ஜெர்லின் அனிகா 2018-ல் மலேசியாவில் நடந்த ஆசிய பசிபிக் பேட்மிண்டன் சாம்பின்ஷிப் போட்டியில் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கமும் 2019-ம் ஆண்டு சீனாவின் தைபேயில் சிறப்புப் பிரிவினருக்கான 2-வது உலக இறகுப் பந்தாட்ட (பேட்மிண்டன்) சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.