கடலூர் அருகே தனியார் கோழிப் பண்ணைகளில் மர்மமான முறையில் இறந்த கோழிகள்.

 
தமிழகம்

கடலூர் அருகே பண்ணைகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறப்பு

காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

கடலூர்: ஒரு வாரத்​தில் 8 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கோழிகள் மர்​மமான முறை​யில் இறந்​ததால் பண்ணை உரிமையாளர்​கள் கவலை அடைந்​துள்​ளனர். இதற்​கான காரணம் குறித்து கால்​நடைத்​துறை அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர்.

கடலூர் மாவட்​டத்​தில் தியாகவல்லி, நொச்​சிக்​காடு, திருச்​சோபுரம், தம்​மனாம்​பேட்டை, சித்​திரைப்​பேட்டை, ஆலப்​பாக்​கம், நடுத்​திட்டு உள்​ளிட்ட கிராமங்​களில் வளர்ப்​புக்​கோழி பண்​ணைகள் உள்​ளன. இந்​தப் பண்​ணைகளில் கடந்த சில தினங்​களாக அடுத்​தடுத்து மர்​மமான முறை​யில் கோழிகள் இறந்து வரு​கின்​றன. கடந்த ஒரு வாரத்​தில் 8 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கோழிகள் இறந்​து​விட்​ட​தாக பண்ணை உரிமையாளர்​கள் கவலை​யுடன் தெரி​வித்​தனர்.

இதுபற்றி தகவல் அறிந்​ததும் கால்​நடை பராமரிப்​புத்​துறை இணை இயக்​குநர் முருகவேல், உதவி இயக்​குநர் வேங்​கடலட்​சுமி ஆகியோர் பண்​ணைகளை பார்​வை​யிட்டு ஆய்வு மேற்​கொண்​டனர். பாதிக்​கப்​பட்ட பண்​ணைகளில் இருந்து உயி​ரிழந்த கோழிகளின் மாதி​ரி​கள் சேகரிக்​கப்​பட்டு, நோய்த்​தொற்று குறித்த பரிசோதனைக்​காக ஆய்​வகங்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

கோழிகளின் உயி​ரிழப்​புக்​கான காரணத்தை கண்​டறிய​வும், நோய்த் தொற்று மற்ற பண்​ணைகளுக்கு பரவுவதைத் தடுக்​கவும் கால்​நடை மருத்​து​வக் குழு​வினர் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். பண்ணை உரிமையாளர்​களுக்கு அறி​வுறுத்​தல்​களை​யும் வழங்கி உள்​ளனர். கோழிகளுக்கு அசாதா​ரண​மான அறிகுறிகள் தென்​பட்​டாலோ, திடீர் உயி​ரிழப்பு ஏற்​பட்​டாலோ உடனடி​யாக அரு​கில் உள்ள கால்​நடை மருத்​து​வ​மனைக்கு தகவல் தெரி​விக்க வேண்​டும் என்று அறி​வுறுத்​தினர்.

இது​குறித்து அதி​காரி​கள் கூறும்​போது, “கடந்த 30-ம் தேதி முதல் நவ.2-ம் தேதி வரை கோழிப் பண்​ணைகளில் சுமார் 6 ஆயிரம் கோழிகள் இறந்​துள்​ளன. பாதிக்​கப்​பட்ட பண்​ணைகளில் இருந்து மாதி​ரி​கள் சேகரிக்​கப்​பட்டு நாமக்​கல் கோழி ஆராய்ச்சி ஆய்​வுக்​கூடம் மற்​றும் மாதவரத்​தில் உள்ள மத்​திய பல்​கலைக்​கழக ஆய்​வுக் கூடத்​துக்கு பரிசோதனைக்​காக அனுப்​பப்​பட்​டுள்​ளன.

நாமக்​கல் கோழி நோய் ஆராய்ச்சி கூட்​டத்​தின் அறிக்​கை​யின்​படி, வைரஸ் நோய் தொற்று இல்லை என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. தீவனத்​தில் நச்​சுப்​பொருட்​கள் கலந்​துள்​ளனவா என்​பதை கண்​டறிவதற்​காக மாதவரத்​தில் உள்ள மத்​திய பல்​கலைக்​கழக ஆய்​வுக்​கூடத்​தின் பரிசோதனை முடிவு​களை எதிர்​பார்த்​திருக்​கிறோம்” என தெரி​வித்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT