வல்லன்குமாரவிளையில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் தீப்பிடித்து புகை மூட்டம் எழுந்தது. 
தமிழகம்

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் தீ விபத்து

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வல்லன்குமாரவிளையில் கோபி என்பவரின் பழைய பிளாஸ்டிக் கிட்டங்கி உள்ளது. இங்கு கொள்முதல் செய்யப்பட்ட பழைய பிளாஸ்டிக் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் கிட்டங்கியில் இருந்து புகைமூட்டம் ஏற்பட்டது. இதுபற்றி கோபி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். பிளாஸ்டிக் பொருட்களில் பற்றிய தீ வேகமாக எரிந்தது. காற்றும் அதிக அளவில் இருந்ததால் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. அருகில் உள்ள வீடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தில் கிட்டங்கியில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் சேதமடைந்தன. இதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

          
SCROLL FOR NEXT