அம்மாபாளையம் ஆவின் பால் பவுடர் தொழிற்சாலையில் பால் பவுடர் உற்பத்தி பணியை பால்வள துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று ஆய்வு செய்தார். அருகில், துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்டோர். 
தமிழகம்

ஆவின் மூலம் இலங்கை மக்களுக்கு வழங்க 300 மெட்ரிக் டன் பால் பவுடர் தயார்: பால்வள துறை அமைச்சர் நாசர் தகவல்

செய்திப்பிரிவு

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் வாழும் மக்களுக்கு அனுப்புவதற்காக 300 மெட்ரிக் டன் பால் பவுடர் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரி வித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள ஆவின் பால் மற்றும் பால் பவுடர் தொழிற்சாலையில் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 150 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், பால் பவுடர் தயாரிப்பு பணி மற்றும் தரம் குறித்து ஆவின் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, “பொருளா தார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக 4 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பி வைக்க மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நட வடிக்கை எடுத்துள்ளார். ஆவின் மூலம் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் வழங்கப்படவுள்ளன. இதற் காக, அம்மாபாளையம் மற்றும் சேலத்தில் தலா 150 மெட்ரிக் டன், ஈரோட்டில் 200 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது.

இதுவரை 3 இடங்களிலும் 300 மெட்ரிக் டன் பால் பவுடர் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஆவின் நிறுவனத்தில் இனிப்பு பொருட்களை வாங்க வேண்டும் என முதல்வரின் உத்தரவு காரணமாக, ரூ.87 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 100 கிராம் ஆவின் நெய் கொடுக்கப்பட்டது. திருக் கோயில்களில் ஆவின் நெய் பயன்படுத்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆவின் பால், பால் பவுடர், நெல் மற்றும் இனிப்பு வகைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தரமாக தயா ரிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.

அப்போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை ஆணையர் ஜி.பிரகாஷ், ஆவின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் என்.சுப்பையன், ஆட்சியர் பா.முருகேஷ், திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவர் கம்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT