தமிழகம்

ஒட்டன்சத்திரம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

செய்திப்பிரிவு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆழியாறு அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத் தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

ஒட்டன்சத்திரத்தில் திமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் நகர் திமுக செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. ப.காளியப்பன், மாவட்ட அவைத்தலைவர் தி.மோகன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, ஒன்றியச் செயலாளர் ஜோதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.க்கள் திருச்சி சிவா, ப.வேலுச்சாமி ஆகியோர் பேசினர்.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் 505-ல் தற்போது வரை 208 வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆழியாறு அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT