வடசென்னையில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
சென்னை பேசின் பிரிட்ஜ் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறால் ராயபுரம், காசிமேடு, பேசின்பிரிட்ஜ், துறைமுகம் பகுதிகளில் பல வாக்குச்சாவடி மையங்களில் மின் தடை ஏற் பட்டது. நேற்று மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டால் வாக்குச் சாவடிகளுக்குள் போதிய வெளிச் சம் இல்லாமல் இருந்தது.
உடனே தேர்தல் பணியாளர் கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அந்த வெளிச்சத்தில் வாக்குப் பதிவு பணிகளை கவனித் தனர்.