தமிழகம்

ஜிப்மரில் இலவச மாத்திரைகள் விநியோகம் நிறுத்தம்: நகைகளை அடகு வைத்து ஏழை மக்கள் மருந்து வாங்கும் அவலம் - ஆளுநரும், முதல்வரும் பிரச்சினையை தீர்ப்பார்களா?

செய்திப்பிரிவு

ஜிப்மரில் நோயாளிகளுக்கு இலவச மாக வழங்கப்படும் முக்கிய மாத்திரைகள் விநியோகம் பல மாதங் களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொற்றா நோய்க ளுக்கு சிகிச்சை பெறுவோர் பலரும் நகைகளை அடகு வைத்து மருந்து வாங்கும் நிலைக்கு தள் ளப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி கோரிமேட்டில் மத்தியஅரசின் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்கு புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தில் இருந்தும்ஏராளமான ஏழை மக்கள் சிகிச் சைக்காக வருகின்றனர். மத்திய அரசு இம்மருத்துவமனைக்கு அனைத்து உயர் நவீன சாதனங்கள் தொடங்கி மாத்திரை வாங்குவது வரை அனைத்துக்கும் போதிய நிதியை மத்திய அரசு அளிக்கிறது. ஆனால் இங்குள்ள நிர்வாகம் அதைமுழுமையாக மக்களுக்கு செயல் படுத்தாததுதான் பிரச்சினையை அதிகரிக்க செய்துள்ளது.

சிகிச்சையில் உள்ள நோயாளி கள் தரப்பில் கூறுகையில், “இருஆண்டுகளாக தொற்றா நோய்க ளான நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து மாத்திரைகளை சரியாக தருவதில்லை. சிகிச்சைக்கு வருவோரிடம் அத்தியாவசிய மாத்திரை கள் கையிருப்பில் இல்லை என்று வெளியில் வாங்கச் சொல்கின்றனர். கரோனா காலமாக இருந்ததால் டெண்டர் விடவில்லை என்று நிர்வாகம் குறிப்பிட்டது. ஆனால் இப்பிரச்சினை சரியாகவில்லை. பலரும் நகைகளை அடகு வைத்து மாத்திரை வாங்குகின்றனர். டெண்டர் வைத்து சரி செய்வதாக கூறிய ஜிப்மர் நிர்வாகம் இதை சரிசெய்யவில்லை” என்று குறிப் பிட்டனர்.

இதுதொடர்பாக திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறுகையில், “ஜிப்மர் இயக்குநராக ராகேஷ் அகர்வால் வந்தபிறகு 83 வகை யான மருந்துகளை வாங்காமல் விட்டுள்ளனர். பிரசவத்திற்கு வரும் பெண்கள் தொடங்கி நடக்கவே இயலாத வகையில் வரும் எலும்புசிகிச்சை நோயாளிகள் வரை பலரையும் வெளியில்தான் பிளேட்,மாத்திரை, கையுறை என அனைத்துமருந்துகளையும் வாங்கி வரச் சொல்கிறார்கள்” என்று குறிப் பிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் கூறுகையில், “ஜிப்மருக்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய மருந்துகள் கொடுப்பதில்லை. வெளியில் வாங்க சொல்கிறார்கள். நோயாளிகளுக்கு எதிராக யார் இருக்கி றார்கள்?” என்று கேள்வி எழுப் பியுள்ளார்.

புதுச்சேரி ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக கிழக்கு மாநிலச் செயலர் அன்பழகன் கூறுகையில், “ஜிப்மரில் நோயாளிகளுக்கு உரிய மருந்து,மாத்திரைகள், ஊசி இல்லை. வெளியில் வாங்கி வரச் சொல்கின் றனர்.

இலவச மருத்துவமனை என்றநிலையில் இருந்து தனியார் மருத்துமவனை போல் மாறிவிட்டது. ஆளுநரும், முதல்வரும் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

கரோனா காலமாக இருந்ததால் டெண்டர் விடவில்லை என்று நிர்வாகம் குறிப்பிட்டது. ஆனால் இப்பிரச்சினை சரியாகவில்லை.

SCROLL FOR NEXT