தமிழகம்

இலங்கை சிறையில் இருந்து 34 மீனவர்கள் திரும்பினர்

செய்திப்பிரிவு

ராமேசுவரத்தைச் சேர்ந்த 25 மீனவர் களையும், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள சிறைகளில் அடைத்து வைத்திருந்தனர்.

கடந்த 14-ம் தேதி இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தால் இம்மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான சாகர் கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு நேற்று மாலை 4 மணியளவில் கடலோர காவல்படையினர் கொண்டு வந்து சேர்த்தனர்.

தாயகம் திரும்பிய மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை இயக்குநர் பியூலா ராஜேஷ், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் கேசவன் உள்ளிட்ட அதிகாரிகள் புத்தாடைகள், உணவு ஆகியவற்றை அளித்து வரவேற்றனர்.

SCROLL FOR NEXT