தமிழகம்

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது ஓஎம்ஆர் சாலையோர பூங்கா: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கம்

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் கஸ்துாரிபாய் நகர் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை உள்ள சாலையோர இடம் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டு பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பல்வேறு பொது இடங்களை பொது மக்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு இடமாக மாற்றும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ஓ.எம்.ஆரில் கஸ்துாரிபாய் நகர், இந்திராநகர், திருவான்மியூர் உள்ளிட்ட பறக்கும் ரயில் நிலையங்களுக்கு கீழே உள்ள பகுதிகளை சீரமைத்து பொது மக்களுக்கு ஏற்ற இடமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

இதன்படி இந்த பகுதியில் 2 கி.மீ நீளத்திற்கு ரூ.20 கோடி ரூபாயில், நடைபாதை, சைக்கிள் பாதை, மூலிகை தோட்டம், உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதன்படி 2020ம் ஆண்டு தொடங்கிய பணிகள் தற்போது நிறைவடைந்து இந்த இடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சைக்கிள் பாதை மற்றும் நடைபயிற்சி பாதை

உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள்

ஸ்கேட்டிங் மைதானம் மற்றும் இறகு பந்து விளையாட்டு மைதானம்

வண்ண நீரூற்று மற்றும் இரும்பு கழிவுகளால் தயாரிக்கப்பட்ட வண்ண சிலைகள்

பகிங்ஹாம் கால்வாய் கிழக்கு பகுதியில், மியாவாகி என்ற அடர்வனம்

SCROLL FOR NEXT