அதிகளவில் கலர் பவுடர் கலந்திருப்பதாக பறிமுதல் செய்யப்பட்ட சிக்கனை பினாயில் ஊற்றி அழிக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். படம்:எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுச்சேரி | அதிகமாக கலர் பவுடர் சேர்ப்பு: கோழி இறைச்சி பறிமுதல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: கலர் பவுடர் அதிகமாக சேர்த்தி ருந்ததால் 50 கிலோ கோழி இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு வகைகளை விற்றால் கடைகளுக்கு சீல் என எச்சரித் துள்ளனர்.

கேரளாவில் கோழி இறைச் சியை கொண்டு தயாரிக்கப்படும் சவர்மா சாப்பிட்டவர் இறந்த தையடுத்து தமிழகத்தில் உணவ கங்களில் சோதனைகள் நடத்தப் பட்டன.

இதைத் தொடர்ந்து புதுவையில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட நகர பகுதிகளில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 27 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் சோதனை மேற்கொண் டனர்.

இதில் ஒரு தனியார் ஓட்டலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கனில் அளவுக்கதிகமாக கலர் பவுடர் சேர்க்கப்பட்டு இருந்ததால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை அழித்தனர்.

பேருந்து நிலையம் அருகே அனைத்து கடைகளிலும் சிக்கனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். சுமார் 50 கிலோவுக்கு மேல சிக்கன் அழிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

"பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு வகைகளை செய்து விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும்" என்று உணவுபாதுகாப்பு துறை செயலர் உதயகுமார் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

SCROLL FOR NEXT